மன்னார்குடி, அக். 10 – மன்னார்குடி ஏ.ஆர்.ஜே. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மேலாண்மை துறை மாணவர்கள், ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி) மற்றும் ஜமால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் இணைந்து அக்டோபர் 10, 2025 அன்று நடத்திய “டைகூன்ஸ் 2025” தேசிய அளவிலான போட்டியில், “மேனேஜ்-ஓ-மேனியா” நிகழ்வில் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த வெற்றிக்கான அணியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.ஏ மாணவர்கள் – வைனேஷ், கவியரசி, கனிஷ்கா, சந்தியா ஆகியோர் இடம்பெற்று, தங்கள் சிறந்த மேலாண்மை திறமைகளை வெளிப்படுத்தி சாம்பியன்களாகத் திகழ்ந்ததோடு, பணப்பரிசும் வென்றனர்.
ஏ.ஆர்.ஜே. கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் துணைத் தலைவர் டாக்டர். ஜீவகன் அய்யநாதன் மாணவர்களை வாழ்த்தி, அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார். கல்லூரி முதல்வர் டாக்டர். டி. வெங்கடேசன் மற்றும் இயக்குநர் டாக்டர். எஸ். சுதா ஆகியோரும் வெற்றியாளர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
தேசிய அளவிலான இத்தகைய சாதனைகள், ஏ.ஆர்.ஜே. கல்லூரி மாணவர்களின் திறமை, தன்னம்பிக்கை மற்றும் போட்டித் தன்மையை வெளிப்படுத்துவதோடு, கல்வி நிறுவனத்துக்கு பெருமை சேர்க்கிறது.